இந்தியா

இங்கிலாந்தில் நுழைந்தது ஒமைக்ரான், இந்தியாவிலும் இரண்டு பேர்களுக்கு பாதிப்பா?

Published

on

உலகையே அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இங்கிலாந்து நாட்டிலும் நுழைந்துவிட்டதாகவும் இந்தியாவிலும் பெங்களூரில் இரண்டு பேருக்கு அதன் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் கடந்த சில வாரங்களாக ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுவது மனித குலத்திற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்டா வைரசை விட அதிக வீரியம் மிக்கது இந்த ஒமைக்ரான் வைரஸ் என்றும் தடுப்பூசி 2 டோஸ் போட்டாலும் இந்த வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் இந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது இங்கிலாந்திலும் இரண்டு பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த சேர்ந்த இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இருப்பினும் இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழையாத வழியில் தகுந்த நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்பதும் விமான நிலையங்களில் கூடுதல் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்தை முழுமையாக தொடங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version