இந்தியா

இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் ஓமிக்ரான்.. 422 பேர் பாதிப்பு…..

Published

on

கடந்த வருட துவக்கத்தில் சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதில், பலரும் பாதிக்கப்பட்டனர். சில லட்சம் பேர் உயிரும் இழந்தனர்.

தற்போது கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 200 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கனவே ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சமீபத்தில் குணமடைந்து வீடு திரும்பினர்.

2022ம் ஆண்டு உலகம் முழுவதும் ஓமைக்ரான் ஆதிக்கம் செலுத்தும் என சிங்கப்புரை சேர்ந்த ஆய்வாளர் எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும், 2 மாதங்களில் உலகமெங்கும் 300 கோடி பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு ஏற்படலாம் என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதாரத்துறை நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட130 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version