இந்தியா

மேலும் 21 பேர்களுக்கு பாதிப்பு: இந்தியாவில் வேகமாக பரவும் ஒமிக்ரான்!

Published

on

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக பரவிவரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 21 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் மெல்ல மெல்ல அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது என்பதும் இதுவரை 75 நாடுகளில் இந்த ஆபத்தான ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையாக 2 டோஸ்ஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வரை இந்தியாவில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 21 பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனால் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று மட்டும் புதிதாக எட்டு பேருக்கு மேல் ஒமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளதாகவும், இதனை அடுத்து அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிதாக ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிக்கபட்ட 8 பேரும் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் இல்லை என்பதும் அதிர்ச்சிக்குரிய தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட எட்டு பேர்களில் 2 பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்து கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 17 பேருக்கும், டெல்லியில் 6 பேருக்கும், குஜராத்தில் 4 பேருக்கும், கர்நாடகாவில் 3 பேருக்கும் சண்டிகர் மற்றும் கேரளாவில் தலா ஒருவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version