இந்தியா

ஒமிக்ரான் பரவல் எதிரொலி: மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பா?

Published

on

இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதை அடுத்து மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நுழைந்தது என்பதும் அதன் பின்னர் படிப்படியாக பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள 11 மாநிலங்களில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவி விட்டதாகவும் இந்தியாவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் டெல்டா வைரசை விட ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் இதனால் சில கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஒமிக்ரான் தொற்று அடுத்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமை பொருளாளர் கீதா கோபிநாத் அவர்கள் இதுகுறித்து கூறிய போது ஒமிக்ரான் வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய டெல்டா வகை வைரஸ் பாதிப்பைவிட குறைவாகவே இருக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவினால் போக்குவரத்திற்கான கட்டுப்பாடு விதிக்க விடலாம் என்றும் தெரிவித்துள்ளார்

டெல்டா வைரசை விட 70 மடங்கு அதிக வேகத்துடன் ஒமிக்ரான் பரவும் என்றாலும் டெல்டாவை விட பத்தில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே பாதிப்பு இருக்கும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒமிக்ரான் வைரஸ் குறித்த அச்சம் நாடு முழுவதும் இருந்து வருவதை அடுத்து மத்திய மாநில அரசுகள் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக உணவகங்கள், பார்கள், திரையரங்குகள் ஆகியவை இரவு 9 மணியிலிருந்து 10 மணிக்குள் மூட வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version