இந்தியா

நேற்று ஒரே நாளில் 30 பேர்களுக்கு ஒமிக்ரான்: இந்தியாவில் வேகமாக பரவுவதால் அதிர்ச்சி!

Published

on

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் முப்பது பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது என்பதும் குறிப்பாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக ஒமிக்ரான் பரவி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் முப்பது பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது என்பதும் இதனை அடுத்து இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஒரே நாளில் நான்கு மாநிலங்களில் முப்பது பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த 10 மாதங்களில் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் திடீரென தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவது சுகாதாரத் துறை அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அதுமட்டுமன்று ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் உச்சத்தை அடையும் என்றும் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

அனைத்து நகரங்களிலும் ஒமிக்ரான் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் செய்யப்பட்டு வருவதாகவும் இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, டில்லி, ராஜஸ்தான், கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், தமிழகம், ஆந்திரா, சண்டிகர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் மிக வேகமாக பரவி வருவதால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version