இந்தியா

டெல்டா வைரஸ் போல் பரவும் ஓமைக்ரான்… மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….

Published

on

கொரோனா 2வது அலையே இன்னும் முடியாத நிலையில் ஒருபக்கம் புதிதாக ஓமைக்ரான் எனும் புதிய வைரஸ் பரவ துவங்கியுள்ளது. உலகம் முழுவதும் இதன் பாதிப்பு காணப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ராஜஸ்தான், மகராஷ்டிரா என 2 மாநிலங்களில் 2 பேர் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், டெல்டா கொரோனா வைரஸுக்கு மாற்றாக இந்த ஓமைக்ரான் வைரஸ் பரவ துவங்கியுள்ளது தெரியவந்துள்ளது எனவும் ஓமைக்ரான் தொற்று பரவும் நிலையை எட்டியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து கொரோனா உறுதி ஆனவர்களில் சுமார் 80 சதவீதம் பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உள்ளதாகவும், ஓமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு நபர்களுக்கு மட்டுமே அறிகுறிகள் காணப்படுவதாகவும், மற்றவர்களுக்கு அறிகுறியற்ற பாதிப்பே உள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version