தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 கொரோனா: அமைச்சரின் அதிர்ச்சி தகவல்

Published

on

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கிட்டத்தட்ட இல்லை என்றே கூறலாம். தினமும் 50க்கும் குறைவானவர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் கடந்த சில மாதங்களாககொரோனாறைவால் எந்தவித உயிர் இழப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த தொற்று ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து தமிழகத்தில் பரவி உள்ளது என்றும் ஒமைக்ரான் BA 4 வகை பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தில் உள்ள அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு பரிசோதனை செய்து வருவதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் மற்ற மாநிலங்களில் இருந்து ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளதா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தும் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமாகி வருகிறார் என்றும் இந்த புதிய வகை கொரோனாவுக்கு பரவும் தன்மையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version