தமிழ்நாடு

BA.4 ஒமிக்ரான் வகை கொரோனாவின் அறிகுறிகள் என்னென்ன? சுகாதாரத்துறை தகவல்!

Published

on

BA.4 ஒமிக்ரான் வகை கொரோனாவின் அறிகுறிகள் என்னென்ன? சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் குறைந்த நிலையில் பொது மக்கள் தற்போது தான் நிம்மதியாக உள்ளனர் என்பதும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென தமிழகத்தில் ஒருவருக்கு BA.4 ஒமிக்ரான் என்ற வகை வைரஸ் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SARS-CoV-2 Coronavirus Variant Omicron cell delta on green background 2021 2022.

இந்த BA.4 ஒமிக்ரான் வகை வைரஸ் மேலும் பரவுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் BA.4 ஒமிக்ரான் என்ற வகை வைரஸ் பாதிப்பு கண்டறிவது எப்படி?என்னென்ன அறிகுறிகள் இருக்கும்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது .

BA.4 ஒமிக்ரான் என்ற வகை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சளி பாதிப்புதான் பொதுவான அறிகுறி என்றும் மூக்கு அடைப்பு, இருமல் உடல் வலி மற்றும் சோர்வு ஆகியவை முக்கிய அறிகுறியாக இருக்கும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .

மேலும் BA.4 ஒமிக்ரான் வைரஸ் பாதித்த ஒரு சிலருக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுவை மற்றும் வாசனை இழப்புகள் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது/ மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சென்று சோதனை செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version