பிற விளையாட்டுகள்

டோக்கியோ ஒலிம்பிக்: அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி போராடி தோல்வி!

Published

on

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி இன்று பெல்ஜியம் அணிக்கு எதிராக விளையாடிய நிலையில் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சற்றுமுன்னர் ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையே நடந்த இந்த போட்டியில் பெல்ஜியம் அணி 5 கோல்கள் போட்ட நிலையில் இந்தியா இரண்டு கோல்கள் மட்டுமே போட்டதால் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இன்றைய போட்டியில் இந்திய அணி முதல் ஆரம்பத்தில் அபாரமாக விளையாடி முதல் கோல் போட்டது என்பதும் அதன் பின் இரண்டாவது கோலையும் எளிதில் இந்தியா போட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பெல்ஜியம் அணி சுதாரித்து அடுத்தடுத்து கோல்கள் போட்டதோடு அந்த அணிக்கு பெனால்டி கார்னர்களும் அதிகம் கிடைத்தது என்பதால் எளிதாக கோல்களை போட்டு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஆடவர் அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் தோல்வியை தழுவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வெண்கலப் பதக்கத்திற்கான மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணி விளையாடவுள்ளது. மாலை 3.30 மணிக்கு ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு இடையே நடைபெறும் அரையிறுதியில் தோல்வியுறும் அணியுடன் இந்தியா மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version