பிற விளையாட்டுகள்

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: வெண்கலம் வென்றது இந்தியா!

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் இன்று மோதியது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் ஆடவர் ஹாக்கி அணி ஆரம்பம் முதலே அசத்தலாக வெற்றி பெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து 3வது இடத்திற்கான வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இன்று விளையாடியது.

இந்தியா மற்றும் ஜெர்மனி அணி வீரர்கள் ஆரம்பம் முதலே ஆவேசமாக விளையாடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆரம்பத்திலேயே இந்திய அணி அதிரடியாக 3 கோல்களை போட்டதை அடுத்து 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதன் பிறகு ஜெர்மனி அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டதால் 3-3 என சமனானது.

இதனை அடுத்து இந்திய வீரர்கள் சுதாரித்து அடுத்தடுத்து இரண்டு கோல்களை போட்டனர். இதனையடுத்து இந்தியா 5-3 என்று முன்னிலையில் இருந்தது. இதன் பின்னர் ஜெர்மனி அணி ஒரே ஒரு கோல் மட்டும் போட்டதை அடுத்து இந்தியா தற்போது 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்தியாவுக்கு தற்போது 3 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தம் நான்கு பதக்கங்கள் இந்த ஒலிம்பிக் போட்டியில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version