பிற விளையாட்டுகள்

டோக்கியோ ஒலிம்பிக்: ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி அபார வெற்றி

Published

on

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி ஒருசில போட்டிகளில் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2-வது சுற்றில் தோல்வி அடைவதால் பதக்கத்தை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

இதுவரை மீராபாய் சானு அவர்கள் பளுதூக்கும் போட்டியில் பெற்றுக்கொடுத்த வெள்ளிப்பதக்கம் ஒன்று மட்டுமே இந்தியாவின் பதக்கமாக உள்ளது என்பதும் இதனை அடுத்து இந்தியா பதக்கப் பட்டியலில் 33 ஆவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான போட்டி சற்று முன் முடிவடைந்தது.

இந்த போட்டியில் இந்தியாவின் ஆடவர் அணி அபாரமாக விளையாடி மூன்று கோல்களை போட்டது. ஆனால் ஸ்பெயின் அணியால் ஒரு கோல் கூட போட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இந்தியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அடுத்ததாக அர்ஜென்டினா அணியுடன் வரும் 29ஆம் தேதி மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version