இந்தியா

தமிழகம்: பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வரும்? முதல்வரின் முடிவு என்ன?

Published

on

இந்தியாவில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது. தற்போது நடைமுறையில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (CPS) ஒழிக்க வேண்டும் என்று கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மூலம் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கடந்த ஜூலை 17ம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் விரிவடைந்த சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அதில், தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை (CPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

விரைவில் இது தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Poovizhi

Trending

Exit mobile version