சினிமா செய்திகள்

சிம்பு கார் மோதிய முதியவர் பலி.. ஓட்டுநர் கைது. நடந்தது என்ன? முழு விவரம்!

Published

on

சென்ற மார்ச் 18-ம் தேதி சென்னை தேனாம்பேட்டை இளங்கோவன் தெருவில் நடிகர் சிம்புக்குச் சொந்தமான இனோவா கார் ஒன்று முதியவர் மீது மோதி விபத்துக்களானது.

விபத்தின் போது காரை ஓட்டுநர் ஓட்டி வந்ததாகவும், அதில் டி.ராஜேந்தர் மற்றும் உடல் நலம் சரியில்லாமல் இருந்த அவரது மகளின் மகனும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

காலில் காயம் ஏற்பட்டு இருந்ததால், குடும்பத்தினர் யாரும் இல்லாமல் ஆதரவு இல்லாமல் இருந்து வந்த அந்த முதியவர், அவர் நலமாக இருந்த போது அந்த பகுதியிலிருந்து மக்களுக்கு வீட்டு வேளை செய்து தருவது அதன் மூலம் வரும் பணத்தில் சாப்பிடுவது, மது அருந்துவது என வாழ்ந்து வந்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று, அவர் கால் காயம் ஏற்பட்டு நடக்க முடியாது என்பதால், தவழ்ந்து வந்து சாலையைக் கடந்துள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக டி.ராஜேந்தர் வந்த சிம்புக்கு சொந்தமான இனோவா கார் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி.ராஜேந்தர் தனது ஓட்டுநரிடம் மருத்துவ உதவிகளைச் செய்து தருமாறு கூறிவிட்டு தனது பேரனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். ஆம்புலன்சில் அந்த முதியவரை அங்கு இருந்த சிலரும், கார் ஓட்டுநரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த முதியவர் இறந்துவிட்டார்.

இப்போது அந்த முதியவரின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாகக் குடுப்பத்திடம் உறவில் இல்லாமல் இருந்த அவரை இப்போது குடும்பம் வந்து சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது. பணத்துக்காக அவர்கள் இப்போது வருகின்றனர்.

கார் ஓட்டுநர் மீது தான் தவறு என்பது சிசிடிவி காட்சிகளை பார்க்கும் போது தெரிகிறது. எனவே கார் ஓட்டுநரைக் கைது செய்தது மட்டுமல்லாமல், காரையும் பரிமுதல் செய்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version