உலகம்

100 கோடி மதிப்பிலான விண்கல்.. படிக்கட்டாக பயன்படுத்தப்பட்ட அவலம்

Published

on

நியூயார்க்: அமெரிக்காவில் 88 வருடம் பழமையான விண்கல் ஒன்றை, வீட்டில் படிக்கட்டாக பயன்படுத்தி இருக்கிறார் பெண் ஒருவர்.

அமெரிக்காவின் மெக்‌ஷிகன் மாகாணத்தில் உள்ள வயல் பகுதி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள விவசாய பெண் ஒருவரின் வீட்டில் உள்ள படிக்கட்டில் இந்த பழைய விண்கல் காணப்பட்டு இருக்கிறது.

அது விண்கல்லின் ஒரு பாகம் ஆகும். 88 வருடங்களுக்கு முன் விழுந்த விண்கல் ஒன்றின் உடைந்த துகள் ஆகும் இது. இதன் மதிப்பு 100 கோடி ரூபாய் வரை போகும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய விண்கல் துகள் இதுதான். இதில் நிறைய இரும்பு தாது பொருட்கள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version