தமிழ்நாடு

ஓலா, ஊபர் கட்டணங்கள் திடீர் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

சென்னை உள்பட பெருநகரங்களில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்கள் திடீரென கட்டணங்களை உயர்த்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைக் கட்டணம் உயரும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது ஓலா, ஊபர் உள்ளிட்ட போக்குவரத்து சேவை செய்யும் நிறுவனங்கள் கட்டணத்தை 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் நிர்ணயித்து இருப்பதாக ஓலா, ஊபர் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த அறிவிப்பு காரணமாக பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்தே இந்த கட்டண உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இதற்கு பொதுமக்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்றும் ஓலா உபேர் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version