வணிகம்

24 மணி நேரத்தில் ஒரு லட்சம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!

Published

on

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புக்கிங் ஜூலை 15-ம் தேதி தொடங்கிய நிலையில், 24 மணி நேரத்தில் 1 லட்சம் ஸ்கூட்டர் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஜூலை 15-ம் தேதி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு தொடங்கப்பட்டது. 499 ரூபாய்க்கு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புக் செய்யலாம். ஆனால் முழுமையான விலை எவ்வளவு என்ற விவரம் தெரியவில்லை.

ஆகஸ்ட் மாதம் முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஓலா ஸ்கூட்டருக்கு சாவி கிடையாது. ஆப் மூலமாக இயங்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனம் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஓலா அதில் முக்கிய பங்கை வகிக்கும் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவின் பிரபல கார் வாடகை நிறுவனமான ஓலா தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிசினஸில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஈட்டர்கோ என்ற நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகமாக உள்ளது.

இந்த ஸ்கூட்டர் மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லலாம் என்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் அதிநவீன வசதிகளுடன் இருக்கும் என்றும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version