சினிமா

ஐஸ்வர்யா ரஜினியின் அடுத்த படத்தில் சிம்பு இல்லையா? டைட்டில் – ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக இணையதளங்களில் தகவல் கசிந்த நிலையில் தற்போது அவர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு அருமையான காதல் கதை என்றும் இந்த படம் இந்தியில் உருவாகி இருப்பதாகவும் அறிவித்துள்ளதோடு ‘ ’ ஓ சாதிசால்’ (Oh Saathi Chal) என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாக ஐஸ்வர்ய ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தை மனு அரோரா என்பவர் தயாராக இருப்பதாகவும் அவருக்கு நன்றி தனது நன்றி என்றும் ஐஸ்வர்ய ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் .

இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ஐஸ்வர்ய ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் சிம்பு இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version