சினிமா செய்திகள்

காஞ்சனா ஹிந்தி ரீமேக் ஆரம்பம்; லாரன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published

on

ராகவா லாரன்ஸ் பேய் மற்றும் காமெடி கலந்து காஞ்சனா படத்தை இயக்கி பிரம்மாண்ட வெற்றி பெற்றார். அதன் தொடர்ச்சி மற்றும் வசூல் வேட்டை காஞ்சனா 3 வரை பின்னி எடுக்கிறது.

இந்நிலையில், காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்குகிறார் என்ற செய்தி முன்னதாக வெளியானது. தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி உள்ளதாக ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் அக்‌ஷய் குமார் தான் இந்தி பட காஞ்சனாவில் ஹீரோவாக நடிக்கிறார். லாரன்ஸ் மற்றும் அக்‌ஷய் குமார் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள லாரன்ஸ் காஞ்சனா ஹிந்தி படம் ஆரம்பமான மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்துள்ளார்.

தமிழில் வசூல் வேட்டையாடிய காஞ்சனா படம் இந்தியிலும் வசூல் வேட்டை ஆடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version