வேலைவாய்ப்பு

தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையில் அதிகாரி வேலை!

Published

on

தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையில் காலியிடங்கள் 13 உள்ளது. Assistant Training Officer வேலைக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 13

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Assistant Training Officer (Stenography-English)
காலியிடங்கள்: 12

வேலை: Assistant Training Officer (Secretarial Practice)
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.35,900 – 1,13,500 வழங்கப்படும்.

கல்வித்தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சு பிரிவில் Higher Grade and Senior Grade தேர்ச்சு பெற்று தமிழக அரசால் நடத்தப்படும் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Assistant Training Officer (Secretarial Practice)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Commercial Pratice பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று சுருக்கெழுத்து தட்டச்சில் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்ஏ, எஸ்டி, எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் பிரிவினர்களுக்கு வஉச்ச வயது கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150 மற்றும் ஒருமுறை பதிவுக் கட்டம் ரூ.150 செலுத்த வேண்டும். ஏற்கனவே, ஒருமுறை பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் திரும்ப செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிகக வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துக்கொள்ள http://www.tnpsc.gov.in/Notifications/2019_14_notification_ato.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2019

seithichurul

Trending

Exit mobile version