தொழில்நுட்பம்

விவோ ஸ்மார்ட்போன்களுக்கு ஸ்மார்ட்டான சலுகை.!

Published

on

பல புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து விவோ நிறுவனம் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து விவோ நிறுவனம் தனது முந்தைய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அபாரமான சலுகைகளை அறிவித்துள்ளது.

விவோ வொய்81 ஸ்மார்ட்போன் மற்றும் விவோ வொய்71i ஸ்மார்ட்போன்களுக்கு, அதன் அசல் விலையிலிருந்து ரூ.1000 தள்ளுபடியை விவோ நிறுவனம் வழங்கியுள்ளது. விவோ வொய்81 ஸ்மார்ட்போன் மற்றும் விவோ வொய்71i ஸ்மார்ட்போன் தற்பொழுது சலுகை விலையில் அமேசான், பிளிப்கார்ட் தளம் மற்றும் விவோ ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வொய்81 ஸ்மார்ட்போன் இன் 3ஜிபி ரேம் வேரியண்ட் தற்பொழுது சந்தையில் ரூ.10,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் விவோ வொய்81 ஸ்மார்ட்போன் இன் 4ஜிபி ரேம் வேரியண்ட் தற்பொழுது வெறும் ரூ.12,490 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விவோ வொய்81 ஸ்மார்ட்போன் கோல்டு மற்றும் பிளாக் நிறத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. விவோ வொய்81 ஸ்மார்ட்போன் இன் அசல் விலை ரூ.13,490 என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வொய்71i ஸ்மார்ட்போன் தற்பொழுது சலுகை விலையில் ரூ.7,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விவோ வொய்71i ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் கோல்டு மற்றும் மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version