இந்தியா

மாணவர் பதிவிட்ட ஒரேயொரு ட்வீட்டால் மனம் மாறிய ஒடிசா அரசு!

Published

on

ஒடிசாவில் மாணவர் ஒருவர் பதிவிட்ட டுவீட்டால், பேருந்து கால அட்டவணையை மாநில அரசு மாற்றியுள்ளது.

ஓடிசா தலைநகர் புவனேஷ்வரைச் சேர்ந்த மாணவர் சாய் அவனேஷ், இவர் லிங்கப்பூரில் இருந்து வரும் பேருந்து ஒன்றில் ஏறி பள்ளி செல்வது வழக்கம். இந்த நிலையில், அந்த பேருந்தின் புறப்படும் நேரம் திடீரென மாற்றியமைக்கப்பட்டது. இதனால் மாணவர் சாய் அவனேஷ் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்.

இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்ட சாய், ‘எனக்கு பள்ளி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது, ஆனால் நான் செல்ல வேண்டிய பேருந்தோ லிங்கப்பூரில் இருந்தே 7.40 மணிக்கு தான் கிளம்புகிறது. இதனால் நான் தினந்தோறும் காலதாமதமாக பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது’ இவ்வாறு டுவீட் செய்தார்.

இதனையடுத்து சாய் அவனேஷின் பதிவை பலரும் ரிடுவீட் செய்தனர். மேலும், இதற்கு உரிய நடவடிகை்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பினரும் கோரிககை விடுத்தனர். இது மாநில அரசின் கவனத்திற்கு செல்ல, போக்குவரத்து துறையை அணுகி குறிப்பிட்ட அந்த பேருந்தின் கால நேரத்தை மாற்றியமைக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து மாணவர் சாய் கேட்டுக்கொண்டபடியே பேருந்து நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

Trending

Exit mobile version