வணிகம்

மீண்டும் ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்.. கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறதா பொருளாதாரம்!

Published

on

பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, மீண்டும் அக்டோபர் மாதம் 1 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 ஊரடங்கு காரணமாக, மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான ஜிஎஸ்டி வசூல், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக ஜிஎஸ்டி வசூல் குறைந்து இருந்தது. தற்போது ஊரடங்கில் இருந்து பொரும்பாளனவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஜிஎஸ்டி வசூலும் அதிகரித்துள்ளது.

அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் 1,05,155 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. அதில் மத்திய ஜிஎஸ்டி 19,193 கோடி ரூபாய், மாநில ஜிஎஸ்டி 25,411 கோடி ரூபாய். ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி வசூல் 52,540 கோடி ரூபாய் (23,375 கோடி ரூபாய் இறக்குமதி பொருட்களுக்காக வரி வசூல்) வசூலாகியுள்ளது. மேலும் செஸ் வரியாக 8,011 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.

செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் 95,480 கோடி ரூபாயாக இருந்தது.

அக்டோபர் மாதம் 80 லட்சம் ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டு, வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version