தமிழ்நாடு

தேர்தல் தேதிகள் போக மேலும் 2 நாட்கள் டாஸ்மாக் மூடல்!

Published

on

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஏற்கனவே ஏழு நாட்கள் டாஸ்மாக் கடைகள் ஒருசில மாவட்டஙக்ளில் மட்டும் மூடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு நாட்கள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து முதல் கட்ட ஊராட்சி தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அக்டோபர் 4 முதல் ஆறாம் தேதி வரையிலும் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அக்டோபர் 7 முதல் 9ஆம் தேதி வரையிலும் அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கை நாளான அக்டோபர் 12-ஆம் தேதியும் அந்தந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தேர்தல் ஆணையம் அதிரடியாக சற்றுமுன் அறிவித்துள்ளது என்பதை பார்த்தோம்.

இதனால் ஏழு நாட்கள் டாஸ்மாக் கடைகள் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மேலும் இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அதேபோல அக்டோபர் 19ஆம் தேதி மிலாடி நபி என்பதால் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மது பிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் முன்கூட்டியே மதுவை வாங்கி வைக்க அவர்கள் ஏற்பாடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version