தமிழ்நாடு

ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரட்டைக்குழல் துப்பாக்கி இல்லை, வெறும் தீபாவளி துப்பாக்கி: ஓ ராஜா!

Published

on

சசிகலாவை சந்தித்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ ராஜா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவரும் இரட்டை குழல் துப்பாக்கி இல்லை என்றும் வெறும் தீபாவளி துப்பாக்கி என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா நேற்று சசிகலாவை சந்தித்தார். இந்த நிலையில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக ஓ ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி ஓபிஎஸ்-ஈபிஎஸ் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு ஒரு ஓ ராஜா பேட்டி அளித்தபோது கூறியதாவது:

ஓபிஎஸ்-ஈபிஎஸ் சேர்ந்து கட்சியை என்ன டெவெலப் செய்திருக்கிறார்கள். கட்சி தரைமட்டத்திற்கு வந்துவிட்டது. தொண்டர்கள் அனைவரும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். சசிகலாவின் வருகையால்தான் கட்சியை காப்பாற்ற முடியும்

இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போல ஓபிஎஸ்-ஈபிஎஸ் செயல்பட்டு வருவதாக கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் இரட்டை குழல் துப்பாக்கி இல்லை, வெறும் தீபாவளி துப்பாக்கி – சுருள் கேப் போட்டு சுட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான். இவர்களது பஞ்சாயத்தை தீர்க்கவே நேரம் போதாது. இருவரும் தனிதனி குழு அமைத்து கட்சியை நடத்தி வருகின்றனர்.

ஒன்றாக செயல்பட சசிகலா அழைப்பு விடுத்தும் இருவரும் போக மறுப்பதற்கு காரணம் பயம் தான். சசிகலா வந்தால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் டம்மியாகிவிடுவார்கள். அதனால்தான் அவரை உள்ளே விடக்கூடாது என இருக்கிறார்கள். சசிகலா வருகை மட்டுமே அதிமுகவை காப்பாற்றும். தொண்டர்கள் இனியாவது சுதாரித்துக்கொண்டு இரட்டை தலைமை வேண்டாம் என்று சொல்ல வேண்டும். என்னை நீக்க இவர்களுக்கு தகுதியில்லை, இவர்கள் என்ன ஜெயலலிதாவா ? என்றும் ஓ ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version