கிரிக்கெட்

#NZvsIND: நியூசிலாந்து விக்கெட் கீப்பரை ஏமாற்றிய தோணி: வைரலாகும் வீடியோ

Published

on

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டி தொடரை வெற்றி பெற்றதை தொடர்ந்து டி20 தொடரில் விளையாடி வருகிறது.

மூன்று பொட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து ஆணி வெற்றிப் பெற்றிருந்தது. நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 2-வது டி20 போட்டியில் இந்திய வெற்றிபெற்று சமன் செய்தது.

இந்தப் போட்டியின் போது தோணி பேட்டிங் செய்த போது செய்த ஒன்று வீடியோவாக வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் தோணி பேட்டிங் செய்யும் போது கோட்டிற்கு வெளியே வேகமாகச் சென்று பந்தை சிக்ஸர் அடிப்பது போல் முயன்று அதனைத் தடுத்துச் சிங்கல்ஸ் மட்டும் எடுக்கிறார்.

பந்து எப்படியும் தனது கைக்கு வரும் விக்கெட் எடுத்துவிடலாம் என்று நினைத்த நியூசிலாந்து விக்கெட் கீப்பர் ஏமாற்றம் அடைகிறார். இந்த வீடியோவை வைரல் ஆக்கி வரும் தோணி ரசிகர்கள் “நீ படிச்ச ஸ்கூல்ல, நான் ஹெட்மாஸ்டர்டா…!” என்று தோணி சொல்வது போல் மீம்ஸ்களையும் பரப்பி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்.

Trending

Exit mobile version