ஆரோக்கியம்

சத்துகள் மிகுந்த பாசிப் பயறு பயன்கள் மற்றும் நன்மைகள்!

Published

on

பாசிப் பயறு:

பச்சைப் பயறு, பாசிப் பயறு என்று அழைக்கப்படுகிறது. பாசிப் பயறு அல்லது பாசிப்பயறு என்பது பருப்பு வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது பச்சைப் பயறு அல்லது சிறுபயறு எனவும் அழைப்படுகிறது.

விட்டமின்:

மஞ்சள், பழுப்பு, கறுப்பு நிறங்களிலும் பாசிப் பயறானது காணப்படுகிறது.

பாசிப் பயற்றில் நார்ச்சத்து மிகுதி. இதில் புரதம், மாவுச்சத்தும் உள்ளது. வைட்டமின் பி9 & பி1, பி5, பி6, பி2 & வைட்டமின் சி, ஏ சத்துகளும் உள்ளன.

பாசி பயற்றில் விட்டமின் பி9 (ஃபோலேட்டுகள் மிக அதிகளவும், பி1(தயாமின்) அதிகளவும் காணப்படுகின்றன. மேலும் இதில் விட்டமின் பி5 (நியாசின்), பி6 (பைரிக்டாஸின்), பி2 (ரிபோஃப்ளோவின்), விட்டமின் சி, ஏ ஆகியவையும் உள்ளன.

இந்த பயிரை உணவில் ஏழு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது.

பாசி பயற்றில் தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீசு, செலீனியம், கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம், புரதம், நார்ச்சத்து, தாதுப் பொருட்கள், கார்போஹைட்ரேட் ஆகிய உடலின் அத்தியாவசிய செயல்பாட்டுக்கு அவசியமான கனிமச் சத்துகளும் இதில் உள்ளன.

ஊட்டச்சத்து விவரம்:

100 கிராம் பாசிப்பயற்றில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன (1).

  • கலோரி: 347 kcal
  • கார்போஹைட்ரேட்: 62.62 கிராம்
  • கொழுப்பு: 1.15 கிராம்
  • புரதம்: 23.86 கிராம்
  • நார்ச்சத்து: 16.3 கிராம்
  • வைட்டமின் B6: 20% தினசரி மதிப்பில் (DV)
  • இரும்புச்சத்து: 6.74 மிகி (52% DV)
  • கால்சியம்: 132 மிகி (13% DV)
  • பொட்டாசியம்: 1246 மிகி (35% DV)

குழந்தைகள்:

நிறைவு திறன் குறைவாகக் குழந்தைகளுக்கு உணவில் இந்த பாசிப்பயிறை வல்லாரை கீரையுடன் சேர்த்து கொடுப்பதன் மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

ஊட்டச்சத்துக்கள்:

202 கிராம் வேகவைத்த பச்சைப்பயிறில்,

  • கலோரிகள் – 212
  • கொழுப்பு – 0.8 கிராம்
  • புரதச்சத்து – 14.2 கிராம்
  • கார்போஹைட்ரேட் – 38.7 கிராம்
  • நார்ச்சத்து – 15.4 கிராம்
  • ஃபோலேட் (B9) – 80% (தினசரி உட்கொள்ள வேண்டிய அளவில்)
  • மாங்கனீசு – 30%
  • மெக்னீசியம் – 24%
  • வைட்டமின் பி 1 – 22%
  • பாஸ்பரஸ் – 20%
  • இரும்புச் சத்து – 16%
  • தாமிரம் – 16%
  • பொட்டாசியம் – 15%
  • துத்தநாகம் – 11%

இரத்த அழுத்தம்:

பாசி பயற்றில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது. எனவே பாசிபயறினை அடிக்கடி உணவில் சேர்த்து இரத்த அழுத்தத்தைச் சீராக்கலாம்.

உடல் எடை:

உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் உணவில் பாசி பயற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்குப் பாசிப் பயறு மிகச் சிறந்த உணவாகும்.

Trending

Exit mobile version