தமிழ்நாடு

நர்சிங், பி.பார்ம், ரேடியோகிராபி, உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: அதிரடி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தள்ரவுகள் அறிவிக்கப்பட்ட வந்தன என்பதும் குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு படிப்பும் தொடங்கியது.

மேலும் இன்று முதல் பி.இ மற்றும் பி.டெக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ளது என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் பல்வேறு படிப்புகளுக்கும் அட்மிஷன் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. மருத்துவம் சார்ந்த நர்சிங், பி.பார்ம், ரேடியோகிராபி, டயாலிசிஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் http://tnhealth.tngov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை மருத்துவம் சார்ந்த படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version