தமிழ்நாடு

நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது: தமிழ்நாடு அரசு அரசாணை!

Published

on

வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் மழலையர் பள்ளி திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் வரும் 1ஆம் தேதி மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்து தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே. மேலும் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் பள்ளிகளும் நவம்பர் 1 முதல் திறக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. இந்த செய்தியை தமிழக அரசு உறுதி செய்யவில்லை என்றும் என்பதும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இதுகுறித்து ஆய்வு செய்து வருவதாகவும் மழலையர் பள்ளிகள் திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படாது என்றும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் சற்றுமுன் வெளியான தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மழலையர் பள்ளிகள் வரும் நவம்பர் 1ஆம் தேதி திறக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version