வேலைவாய்ப்பு

தமிழகச் சுகாதாரத்துறையில் செவிலியர் வேலை!

Published

on

தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவனைகளில் காலியிடங்கள் 2345 உள்ளது. செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தகாலம் மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு உடனே விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 2345

வேலை: செவிலியர் (Nurses)

மாதம் சம்பளம்: ரூ.14,000

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 57 வயதுவரை உள்ள எம்பிசி, டிஎன்சி, பிசி, பிசிஎம், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர்களும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: பொது செவிலியர் பாடப்பிரிவில் 3 ஆண்டுப் படிப்புடன் Psychiatry-இல் 6 மாத பயிற்சி பெற்று மாநில செவிலியர் கவின்சில் பதிவு செய்திருக்கும் ஆண்களும், பொது செவிலியர் பாடப்பிரிவில் 3 ஆண்டுப் படிப்புடன் Midwifery-இல் 6 மாத பயிற்சி பெற்று Nurse and Maternity Assistant ஆரப் பதிவு செய்திருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்குச் செவிலியர் பாடப்பிரிவுகளில் இருந்து ஆங்கிலத்தில் கொள்குறி வகையில் 200 கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.350 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.06.2019

எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர்

மேலும் முழு விவரங்கள் அறியக் கொள்ளhttp://www.mrb.tn.gov.in/pdf/2019/Nurses_Notification_07022019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.02.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version