சினிமா செய்திகள்

என்.டி.ஆர் படத்துக்கு அனுமதி.. மோடி படத்துக்கு தடை… பாரபட்ஷம் காட்டுகிறதா தேர்தல் ஆணையம்?

Published

on

விவேக் ஓபராய் பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடித்துள்ள பிஎம் நரேந்திர மோடி படம், வரும் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், தேர்தல் நேரத்தில், மோடி படம் வரக் கூடாது, என்றும் இது தேர்தல் விதிமீறல் எனவும் பட ரிலீசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் மனு வழங்கப்பட்டது.

இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போடுவது குறித்து விளக்கமளிக்க படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதே நேரத்தில், சர்ச்சைக்குரிய இயக்குநர் ராம்கோபால் வர்மா, என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்றில் உள்ள சர்ச்சை பக்கங்களை மையமாக வைத்து லக்‌ஷ்மியின் என்.டி.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.

இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.

ஆனால், தேர்தல் விதிமுறைகளை மீறும் காட்சிகள் படத்தில் இல்லை என தேர்தல் ஆணையம் படத்தின் ரிலீசுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version