இந்தியா

உஷார்.. நீட் தேர்வு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10-ம் தேதி கடைசி நாள்..!

Published

on

2021-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2021, ஆகஸ்ட் 10 கடைசி தேதி ஆகும்.

நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் உள்ளது. ஆன்லைன் முறையிலேயே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ படிப்பில் சேர விருப்பம் உள்ள மானவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கும் போது 2021, ஆகஸ்ட் 10-ம் தேதி இரவு 9:50 மணிக்கு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மானவர்கள், 2021, ஆகஸ்ட் 10-ம் தேதி இரவு 11:50 மணிக்குள் நீட் தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

நீட் தேர்வு விண்ணப்பத்தில் பிழை இருந்தால் 2021, ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி மதியம் 2 மணிக்குள் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

2021 இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு 2021, செப்டம்பர் 12-ம் தேதி மதியம் 2 மணி முதல் 5 மணி வரையில் நடைபெறும்.

தேர்வுக்கு 3 நாட்கள் முன்பு அதற்கான அனுமதிச் சீட்டு ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்படும்.

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் புத்தகங்களிலிருந்து 180 கொள் குறி வினாக்கள் கேட்கப்படும்.

தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறும்.

2021 இளங்கலை மருத்துவ படிப்பு குறித்த ஏதேனும் சந்தேகம் இருந்தால் nta.nic.in மற்றும் ntaneet.nic.in இணையதளம் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்.

seithichurul

Trending

Exit mobile version