இந்தியா

நீட் தேர்வு எப்போது? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை சற்று முன் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 1ம் தேதி ஞாயிறு அன்று ஆங்கிலம், இந்தி உள்பட 11 மொழிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு நீட் தேர்வு தமிழிலும் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் நீட் தேர்வு குறித்து விபரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் https://nta.ac.in அல்லது https://ntanett.nic.in என்ற இணையதள முகவரிகளுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version