இந்தியா

தேசிய பங்குச்சந்தையில் முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணா கைது!

Published

on

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்து சிபிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன் பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் அவருக்கு தலைமை ஆலோசகராக செயல்பட்ட ஆனந்த் சுப்பிரமணியம் மற்றும் ரவி நரேன் ஆகியோரும் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்ததை அடுத்து மூன்று பேர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தது.

இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணன் முன்ஜாமீன் மனு கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன் விசாரணைக்கு வந்தபோது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஏற்கனவே வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவுட்லுக் சுற்றறிக்கையும் விடுவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அதிரடியாக சித்ரா ராமகிருஷ்ணனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்யும்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version