உலகம்

துபாய் செல்லும் என்ஆர்ஐகளே பபல் கம்-ஐ கீழே துப்பினால் எவ்வளவு அபராதம் தெரியுமா?

Published

on

துபாய்: இந்தியாவில் பலர் சாலைகளில் நடந்து செல்லும் போது தங்களது ஷூ அல்லது செறுப்புகளில் பபல் கம் ஒட்டிக்கொண்டு அவதிப்பட்டு இருப்பீர்கள். ஆனால் அதே பபல் கம்மை நாம் சாப்பிடும் போது பல முறை சாலை துப்பிவிட்டுச் சென்று இருப்போம்.

இது போன்று துபாயில் பபல் கம்மை சாலைகளில் அல்லது பொது இடங்களில் துப்பினால் 2003-ம் ஆண்டின் உள்ளூர் சட்ட எண் 11 படி துபாய் முனிசிபாலிட்டி 500 திராஹம் என இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.9717.10 அபராதம் செலுத்த வேண்டும் என டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

இதுவே துபாய் மெட்ரோ ரயில் அல்லது நடைமேடைகளில் பபல் கம் துப்பினால் 1000 திராஹம் என இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.19,434.21 அபராதமாகச் செலுத்த வேண்டும்

எனவே துபாயில் உள்ள என்ஆர்ஐ மற்றும் துபாய் செல்ல இருக்கும் இந்தியர்கள் அங்குப் பபல் கம்மை துப்புவதைத் தவிர்த்துக் குப்பை தொட்டிகளில் துப்புவது நல்லது.

இது போன்று துபாய் முனுசிபாலிட்டி இணையதளத்தில் பல குற்றங்களுக்கு என்ன அபராதம் எனவும் குறிப்பிட்டுள்ளது. எனவே துபாயில் உள்ளவர்கள் மற்றும் துபாய் செல்ல இருப்பவர்கள் அவற்றை முன்னெச்சரிக்கையாகப் படித்து வைத்துக்கொள்வது நல்லது.

seithichurul

Trending

Exit mobile version