உலகம்

உங்க Couple Goals-க்கு அளவே இல்லையா.. இணையத்தை கலக்கிய இந்திய தம்பதியினரின் வித்தியாசமான பனிச்சறுக்கு

Published

on

மினசோட்டா: அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதியினர் சேலை மற்றும் வேஷ்டி அணிந்துகொண்டு பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த தம்பதியினரின் வித்தியாசமான முயற்சிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பெங்களூரை சேர்ந்த தம்பதி திவ்யா மற்றும் மது. இவர்கள் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் வசிக்கின்றனர். மது சாஃப்ட்வேர் நிறுவனத்தில் புரோகிராம் மேனேஜராக இருக்கிறார். திவ்யா தனியார் நிறுவனத்தில் டிஜிட்டல் தயாரிப்பு மேலாளராக இருக்கிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வித்தியாசமான வீடியோக்களை வெளியிடும் வழக்கம் உடையவராக இருந்திருக்கிறார் திவ்யா. விளையாட்டாக நடனம் ஆடுவது, புது புது இடங்களுக்கு சென்று புகைப்படங்களை வெளியிடுவது என்று இருந்தவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மினசோட்டாவில் பிரபலமான பனிச்சறுக்கு இடமான வெல்ச் கிராமதிற்கு பனிச்சறுக்கு செல்ல இந்த தம்பதியினர் முடிவெடுத்துள்ளனர். ஆனால் அதற்கு அணிந்து சென்ற உடைகள் தான் இப்போது ஹிட் அடித்துள்ளது. சேலை மற்றும் வேஷ்டியுடன் இருவரும் அங்கு சென்று பனிசறுக்கில் ஈடுபட்டுள்ளனர். எந்தவித சிரமமும் இன்றி இருவரும் பனிசறுக்கில் ஈடுபடும் வீடியோவை திவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் கீழ் எங்களை திசை திருப்ப நாங்கள் இன்று ஏதாவது பைத்தியக்காரத்தனமாக செய்ய வேண்டியிருந்தது என பதிவிட்டுள்ளார்.

Also Read: சேட்டிலைட் புகைப்படத்தால் சிக்கிய சீனா… வியட்நாம் எல்லையில் ஏவுகணை தளம் அமைப்பது அம்பலம்

நீல நிற அலங்கரிக்கப்பட்ட சேலையுடன் திவ்யாவும், பச்சை நிற சட்டை மற்றும் வேஷ்டியுடன் மதுவும் பாரம்பரிய முறைப்படி இருந்த இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டது. நிறைய பேர் அவர்களுடைய வீடியோவுக்கு வாழ்த்து கூறியிருந்தனர். இதையடுத்து சேலையில் பனிச்சறுக்கு செய்த வீடியோக்களில் எல்லா இடங்களிலிருந்தும் கொட்டிய அனைத்து அன்பிற்கும் நன்றி ”என்று திவ்யா இன்ஸ்டாகிராமில் மற்றொரு பதிவில் எழுதினார்

அதேநேரம் உங்க Couple Goals க்கு அளவே இல்லையா என்றும் சில நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். இது போன்று முயற்சிகள் மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் தடுமாறினாலும் விபத்து ஏற்பட்டு அடிபடுவதற்கு கூட வாய்ப்பிருப்பதாகவும் சிலர் அக்கறையுடன் பதிவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version