இந்தியா

மம்தா பேனர்ஜியின் கருத்து உள்நாட்டு போரை தூண்டும் படி உள்ளது எனக் காவல் நிலையத்தில் புகார்!

Published

on

அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது அதற்கான வரைவு பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சம் பேரின் பெயர் இணைக்கப்படாமல் இவர்கள் வங்க தேசத்தில் இருந்து வந்து இந்தியாவில் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ளதாகக் கூறப்பட்டது.

அதன்படி அசாம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 3.29 கோடி என்று இருந்தது 2.89 கோடியாகக் குறைந்துள்ளது. பாஜக அரசு தேவையில்லாமல் இந்தக் கணக்கெடுப்பை நடத்தி உள்நாட்டுப் போர் சூழும் அபாயத்தினை ஏற்படுத்தியுள்ளதாகத் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி சர்ச்சையான கருத்தினைத் தெரிவித்து இருந்த நிலையில் அதற்குப் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வந்தன.

அது மட்டும் இல்லாமல் அசாமின் லகிம்பூரில் ஆகஸ்ட் 1-ம் தேதி மம்தா பேனர்ஜி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மம்தா பேனர்ஜி உள்நாட்டுப் போர் சூழும் என்று சர்ச்சை கருத்தினைக் கூறியுள்ளதால் அசாம் ஜத்யதபதி யுப பரிஷத் கட்சியின் பொதுச் செயலாளரான சுதிப்தா ஹசாரிகா இந்தப் புகாரினை அளித்துள்ளார்.

மறுபக்கம் மம்தா பேனர்ஜி அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பினை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version