தமிழ்நாடு

புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பம்: உடைந்தது பாஜக கூட்டணி!

Published

on

புதுச்சேரியில் சமீபத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில்னா காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது என்பதும் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் என இரண்டு கூட்டணி புதுவையில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் புதுவைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுவையில் பாஜக ஆட்சி அமையும் என்று கூறியிருந்தார். இதனால் அந்த கூட்டணியில் இருந்த என்ஆர் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதனை அடுத்து புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து விலக என்ஆர் காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளது. முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்தாமல் பாஜக ஆட்சி அமையும் என்று கூறியதே என என்.ஆர்.காங்கிரஸ் விலக காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது என்ஆர் காங்கிரஸ் புதிய அணி அமைக்குமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version