தமிழ்நாடு

புதுச்சேரியில் தனிப் பெரும்பான்மை பெறுமா என்.ஆர்.காங்கிரஸ்..?- காங்., திமுக கூட்டணி பின்னடைவு

Published

on

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல், தமிழகத்தைப் போலவே கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலின் போது மொத்தம் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின.

இன்று காலை 8 மணி முதல் 30 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது 11:30 மணி நிலவரப்படி, அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

அதைத் தொடர்ந்து பாஜக, 3 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு எதிராக கூட்டணி அமைத்துக் களம் கண்ட காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி தேர்தலில் தற்போது வரைப் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இரு கட்சிகளும் தலா ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை வகித்து வருகின்றன.

இதனால் புதுச்சேரியில் இந்த முறை ஆட்சி மாற்றம் நிகழும் எனத் தெரிகிறது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் பிரச்சனை நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version