தமிழ்நாடு

திமுக கூட்டணிக்கு செல்கிறதா என்.ஆர்.காங்கிரஸ்? புதுவையில் திருப்பம்!

Published

on

தமிழகத்தைப் போலவே புதுவையிலும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிக்கு என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அவர்களை திமுக தரப்பு அழைப்பு விடுப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வரும் நிலையில் இந்த கூட்டணியில் தற்போது முறிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக தரப்பு என்ஆர் காங்கிரஸ் தலைவரை கூட்டணிக்கு அழைத்து உள்ளதாகவும் விரைவில் இந்த கூட்டணி தொடர்பாக அறிக்கை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. புதுச்சேரி நலன் கருதி காங்கிரஸ் திமுக உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பற்ற கூட்டணிக்கு என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வரவேண்டும் என வலியுறுத்த்தப்படுகிறது.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்புதல் கொடுத்துவிட்டதாகவும் காரைக்கால் மாவட்ட திமுக வேட்பாளர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பாஜகவை உள்ளே நுழைய விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு என்ஆர் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version