தமிழ்நாடு

வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே 2 தொகுதிகளில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர்!

Published

on

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி உருவாகி இருக்கும் நிலையில் அந்தக் கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

என்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுவையில் உள்ள தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறினார்.

மேலும் என் ஆர் காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்றும் தெளிவான கூட்டணி என்றும் விரைவில் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு தேர்தல் அறிக்கை வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் பாஜக மற்றும் அதிமுக இடம் பெற்றுள்ளது என்பதும் இந்த கூட்டணியிலிருந்த பாமக கூட்டணியில் இருந்து விலகி தனியாக போட்டியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version