பர்சனல் ஃபினான்ஸ்

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

Published

on

ஓய்வுகாலத்திற்கு நிதி சேர்ப்பது மிகவும் முக்கியமானது. அதற்காக பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை என்.பி.எஸ் (National Pension System – தேசிய ஓய்வூதிய திட்டம்) மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Funds). இந்த இரண்டில் எது ஒய்வு காலத்திற்கு சிறந்த தேர்வு என்பதை விளக்கமாக தெரிந்துகொள்வோம்.

தேசிய ஓய்வூதிய திட்டம் ( என்.பி.எஸ்):

  • அரசால் நிர்வகிக்கப்படும் ஓய்வூதிய திட்டம்.
  • 60 வயது வரை பணம் எடுக்க முடியாது (கடுமையான கட்டுப்பாடு).
  • ஓய்வூதியத்திற்கு பிறகு மாத வருமானம் கிடைக்கும்.
  • வரி சலுகைகள் உண்டு (Income Tax Section 80CCD (1B) மற்றும் 80C).
  • பங்கு (Equity), கடன் பத்திரங்கள் (Debt) மற்றும் மாற்று முதலீடுகள் (Alternative Investments) என பல்வகை முதலீடுகள் செய்யப்படுகின்றன.

மியூச்சுவல் ஃபண்டுகள்:

  • நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் முதலீட்டுத் திட்டங்கள்.
  • பல்வகைப்பட்ட திட்டங்கள் கிடைக்கின்றன (பங்கு, கடன், கலப்பு, தங்கம் etc.,).
  • முதலீட்டை எந்த நேரத்திலும் (சில கட்டுப்பாடுகளுடன்) திரும்பப் பெறலாம்.
  • வரி சலுகைகள் உண்டு (Income Tax Section 80C).
  • சந்தை (Market) ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது.

எதை தேர்வு செய்வது?

இள வயதினர்:

  • நீண்ட கால முதலீடு செய்ய விரும்பினால் என்.பி.எஸ் சிறந்தது.
  • ஆனால், பணம் எடுக்கும் வசதி குறைவு.
  • மியூச்சுவல் ஃபண்டுகளில் ஓய்வுகால இலக்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

நடுத்தர வயதினர்:

என்.பி.எஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை கலந்து முதலீடு செய்யலாம்.

முதியோர்:

மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைந்த ரிஸ்க் (Risk) உள்ள திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

தங்கள் ஓய்வுகால இலக்குகள், ரிஸ்க் எடுக்கும் திறன், பணப்புழக்கத் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு என்.பி.எஸ் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது இரண்டையும் கலந்து தேர்வு செய்யலாம். நிதி ஆலோசகரிடம் (Financial Advisor) பேசி முடிவு எடுப்பது சிறந்தது.

Poovizhi

Trending

Exit mobile version