வணிகம்

இனி 500 சப்ஸ்கிரைபர்கள் இருந்தாலே பணம் சம்பாதிக்கலாம்.. யூடியூப் அறிவிப்பு!

Published

on

நீங்கள் யூடியூபில் சேனல் உருவாக்கி பணம் சம்பாதிக்க சப்ஸ்கிரைபர்கள் பெற முடியாமல் போராடி வருகிறீர்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சி செய்தி.

இனி 500 சப்ஸ்கிரைபர்கள் இருந்தாலே பணம் சம்பாதிக்கலாம் என்ற அறிவிப்பை யூடியூப் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Youtube

முன்னதாக யூடியூபில் 1000 சப்ஸ்கிரைபர்கள் இருந்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். இந்த விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் பல சிறு வீடியோ கிரியேட்டர்களை ஊக்குவிக்க முடியும் என்பதற்காக யூடியூப் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும் வீடியோ பார்வை நேரத்திற்கு இருந்து 4000 மணி நேரம் என்ற விதியையும் 3000 மணிநேரமாகக் குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு வருடத்தில் எட்ட வேண்டும்.

இவை மட்டுமல்லாமல் ஷார்ட்ஸ் எனப்படும் சிறு வீடியோக்கள் மூலமாகவும் பணம் சம்பாதிக்க யூடியூப் அனுமதித்து வருகிறது.

சிறு வீடியோ உருவாக்கத்தில் யூடியூபிற்கு போட்டியாக இருக்கும் டிக்டாக் நிறுவனமும் 10,000 ஃபாலோவர்கள் வைத்திருக்கும் நபர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான அனுமதியை வழங்குகிறது. ஆனால் டிக்டாக் நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை உள்ளதால் யூடியூப் பயனர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version