வணிகம்

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெற்றோர்களே உங்களுக்குக் கூகுளின் ‘Family Link’ பற்றித் தெரியுமா?

Published

on

கூகுள் நிறுவனத்தின் ‘Family Link’ மூலம் பெற்றோர்கள் போனை லாக் செய்வது, வரம்புகளைச் செட் செய்வது மற்றும் கூகுள் பிளே ஸோடோர் மூலம் எந்தச் செயலிகளை நிறுவ வேண்டும் என்றும் தடை செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தேர்வு செய்யலாம். அது மட்டும் இல்லாமல் குழந்தைகள் கைகளில் ஸ்மார்ட்போன் உள்ள போது அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதையும் கண்டறிய முடியும்.

கூகுளின் இந்த ‘Family Link’ ஆண்டிராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் போன் பயன்படுத்தும் போது அவர்களைக் கண்காணிக்கவே கூகுள் இந்தச் செயலியினை அறிமுகம் செய்துள்ளது.
இதுவே 13 வயதுக்கு அதிகமானவர்கள் என்றால் இரண்டு தரப்பின் போன்களிலும் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.

ஒருவேலை எதிர்தரப்பினர் தங்களது போனை கண்காணிப்பதை விரும்பவில்லை என்றால் அவர்கள் கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றோர்களால் கண்காணிக்க முடியாது. ஒருவேலைப் பகிர அனுமதி அளித்தால் பெற்றோர்களால் எளிதாகப் போனை கண்காணிக்க முடியும்.

விரைவில் தங்களது குழந்தைகள் கைகளில் உள்ள போனை லாக் செய்யும் வசதியையும் வழங்கப்பட உள்ளதாகச் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version