உலகம்

வேலைநீக்க நடவடிக்கையில் இந்த இ-காமர்ஸ் நிறுவனமுமா? அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

Published

on

காலையில் தூங்கி எழுந்து செய்தியை பார்த்தால் இன்று எந்த நிறுவனம் வேலை மிக்க நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தான் முதலில் பார்க்கத் தோன்றுகிறது. அந்த வகையில் தினமும் ஏதாவது ஒரு முக்கிய நிறுவனம் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்வது குறித்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றேன் என்பதை பார்த்து வருகிறோம்.

சமீபத்தில் போயிங் நிறுவனம் வேலைநீக்க நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது இ-காமெர்ஸ் நிறுவனம் ஒன்றும் வேலை இன்னைக்கு நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் முன்னணி இ-காமெர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான இபே நிறுவனம் சுமார் 500 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களில் 4 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ebay

இ-காமெர்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜேமி லேனோன் என்பவர் இது குறித்து கூறிய போது, ‘நிறுவனத்தை மேலும் வலுப்படுத்தவும் நிறுவனத்தில் செலவினங்களை குறைக்கவும் வேலைநீக்க நடவடிக்கை இன்றி அமையாது என்றும் குறிப்பாக டெலிவரி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நடவடிக்கை அதிக திறன் கொண்ட பகுதிகளில் முதலில் எடுக்கப்பட இருப்பதாகவும் புதிய தொழில்நுட்பங்கள், வாடிக்கையாளர்களின் தேவைகள், முக்கிய சந்தைகள், மாறிவரும் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றுக்கு நிறுவனம் ஈடு கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் எனவே தான் அதிக கவனத்துடன் நாங்கள் இந்த நிறுவனத்தை திறம்பட நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வேலை நிற்க நடவடிக்கையானது மேலும் விரிவுபடுத்தும் திட்டம் இல்லை என்றும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத பகுதிகளில் மட்டுமே வேலை நீக்க நடவடிக்கை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஜூன் நிறுவனம் 1500 பேரை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இபே நிறுவனமும் அதே போன்ற ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. இன்னும் எந்தெந்த நிறுவனங்கள் வேலைநீக்க நடவடிக்கை எடுக்குமோ என்ற அச்சம் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version