சினிமா செய்திகள்

இனி தீபிகாவின் உண்மையான அப்டேட்ஸ் இங்கே கிடைக்கும்!

Published

on

சினிமா நட்சத்திரங்கள் மீடியாவுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகின்றனரோ அந்த அளவுக்கு அவர்களின் புகழ் உச்சத்தில் இருக்கும். மீடியா என்பது ஒரு இன்பத் தொல்லை போன்றது. அது இருந்தாலும், கஷ்டம் தான் இல்லை என்றால் யார் என்றே மக்களுக்கு அடையாளம் தெரியாமல் போய்விடும் என்பதாலும் சிக்கல் தான்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலை தலங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர். நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்த பின்னரும், புதுப் படங்களில் நடிக்க கதைகளை கேட்டு வருகிறார்.

இந்நிலையில், தன்னைப் பற்றிய உண்மையான விவரங்களை ரசிகர்கள் அறிந்து கொள்ளும் விதமாக புதிய வெப்சைட் ஒன்றை துவக்கியுள்ளார். https://deepikapadukone.com/ இந்த இணையதளத்தில், தீபிகாவை பற்றிய விவரங்கள் மற்றும் பட அப்டேட்கள் உடனுக்குடன் கிடைக்கும் என்று ரசிகர்கள் இதனை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

போலியான சமூக வலைதள கணக்குகளில் இருந்து தப்பிக்க இதுவும் நல்ல ஐடியா தான். கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சில நடிகைகள் இந்த வழக்கத்தை பின்பற்றுகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version