இந்தியா

நவோதயா பள்ளிகளில் 6ஆம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு!

Published

on

நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் 6ஆம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

கிராமத்தில் உள்ள மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்காக கடந்த 1986 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த பள்ளிகளை தொடங்க மாநில அரசுகள் நிலம் மட்டும் கொடுத்தால் போதும் என்ற நிலையில், பள்ளியை கட்டவும் நடத்தவும் மத்திய அரசு 20 கோடி ரூபாய் வரை செலவு செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது

6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை நவோதயா பள்ளிகளில் மாணவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்பதும் அதில் 75 சதவீத இடங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்பதும் மூன்றில் ஒரு பங்கு மாணவிகளுக்கு ஒதுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி பயின்றாலும் அதன்பிறகு ஹிந்தி ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தமிழக அரசு முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதன் பின்னர் அனுமதி அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் இந்த நவோதயா பள்ளிகளில் தற்போது 6ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் இருந்து 2.41 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து உள்ள நிலையில் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் ஆகஸ்ட் 11ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் 16182 மையங்களில் இந்த தேர்வு நடைபெறும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் நவோதயா பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 6ஆம் வகுப்பில் உள்ள 47320 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில் 2.4 லட்சம் பேர்களிலிருந்து தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

seithichurul

Trending

Exit mobile version