விமர்சனம்

எப்படி இருக்கு நோட்டா? குடும்ப அரசியல், பினாமி சிஎம்.. மக்கள் மனதை கவர்ந்ததா?

Published

on

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் அறிமுகமான விஜய் தேவரகொண்டா, நடிகையர் திலகம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார். ஆனால், நோட்டா மூலம் தான் முழு தமிழ் நாயகனாக அறிமுகமாகியுள்ளார் விஜய தேவரகொண்டா.

தமிழ், தெலுங்கு என பைலிங்குவல் படமாக வந்துள்ள நோட்டா படத்தை, அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். இவர் ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. குரு விஜய்யை வைத்து சர்கார் எனும் அரசியல் படத்தை எடுத்து வரும் நிலையில், குருவை முந்திய சிஷ்யனாக ஆனந்த் ஷங்கர் விஜய்தேவரகொண்டாவை வைத்து நோட்டா எனும் அரசியல் படத்தை ரிலீசே செய்துவிட்டார்.

தமிழக முதலமைச்சராக இருக்கும் நாசர், தன் மீது பாயவுள்ள வழக்கிற்காக, ஒரு நாள் சிஎம் மாதிரி, இரண்டு வாரங்களுக்கு தனது உல்லாச மகன் விஜய் தேவரகொண்டாவை டம்மி சிஎம் ஆக மாற்றுகிறார்.

இரண்டு வாரத்தில் கேஸ் சாதகமாகிவிடும் என்ற கணக்கு தப்பாய் போக, ஐந்து ஆண்டுகள் சிறை செல்கிறார் நாசர். இனி ஐந்து ஆண்டுகளுக்கும் முதலமைச்சராக நீடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு விஜய் செல்கிறார்.

உல்லாச வாழ்க்கை வாழும் விஜய், பத்திரிகையாளர் சத்தியராஜின் உதவியால், எப்படி நல்ல முதல்வராக மாறுகிறார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை சுற்றி ஆடும் அரசியல் சதுரங்க ஆட்டமாக நோட்டா கிளாப்ஸ் அள்ளுகிறது.

கோலிவுட்டின் இளம் நடிகர்களுக்கு ஒரு நல்ல சவாலாக விஜய் தேவரகொண்டா மாற அதிக வாய்ப்புள்ளது. எதிர்கட்சி தலைவரின் வாரிசாக வரும் சஞ்சனா சரவெடியாய் நடித்துள்ளார். ஹீரோயின் மெஹ்ரீனை விட சஞ்சனா தான் கதையில் ஹீரோயினாக தெரிகிறார். அரசியல் விசுவாசியாக எம்.எஸ். பாஸ்கர் தனக்கே உரிய பாணியில் கலக்கியுள்ளார்.

சாம் சி.எஸ் இசை பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்காமல், பின்னணி இசைக்கு பலம் சேர்த்துள்ளது.

தமிழக அரசியல் சூழலால் நோட்டா படம் நிச்சயம் கல்லாகட்டும்.

நோட்டாவுக்கு எவ்ளோ மார்க்: 55/100.

Trending

Exit mobile version