செய்திகள்

ரஜினிக்கு டூப்பாக நான் இருக்க மாட்டேன்… கட்சி ஆரம்பிப்பேன்…

Published

on

பாஜகவிலிருந்து விலகி ரஜினி ஆரம்பிப்பதாக இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்ற அர்ஜுன மூர்த்தி இன்னும் ஒரு வாரத்தில் புதிய கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளர். தனது அண்ணாநகர் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி இதை அறிவித்துள்ளார் அர்ஜுன மூர்த்தி…

 

கட்சி தொடங்கினாலும் தான் ரஜினிக்கு டூப்பாக இருக்க மாட்டேன், உங்கள் வீட்டில் நீங்கள் வைக்கும் சாம்பாருக்கும் உங்கள் அம்மா வைக்கும் சாம்பாருக்கும் வித்தியாசம் உண்டல்லவா அது போலத்தான் எனக்கும் ரஜினி அரசியலுக்கும் இருக்கும் என்றார் அர்ஜுன மூர்த்திர். மேலும், ஆட்டோவில் சென்று வேண்டுமானால் வாக்கு கேட்பேனே தவிர ஆட்டோ சின்னம் எல்லாம் கேட்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

 

நிறைய மாற்று சிந்தனைகள் தமிழகத்தில் உள்ளன. ஆனால் அதை வழி நடத்தி செல்ல வேண்டியது யார் என்ற கேள்வி உள்ளது. ஏற்கெனவே ஆளுமைகள் பல உள்ள நிலையில் நான் என்ன சாதிக்க முடியும் என நீங்கள் கேட்கலாம்.  என் குடும்பத்தினரும் கேட்டனர். இதற்கு தொலை நோக்கு பார்வை வேண்டும். 60 ஆண்டுகள் ஒருமுறை தமிழகத்தில் ஒரு சுழற்சி வரும். அதற்கான நேரம் வந்து விட்டது. ரஜினி ரசிகர்கள் என் மீது நம்பிக்கை இருந்தால் வரவேற்போம். மன பேதத்தை உண்டு பண்ணும் எந்த நடவடிக்கையும் செய்ய மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version