சினிமா செய்திகள்

தமன்னா மட்டுமல்ல இப்போ பிரபுதேவாவும் பேய் தான்.. தேவி 2 டீஸர் ரிலீஸ்!

Published

on

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தேவி 2 படத்தின் டீஸர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தேவி முதல் பாகத்தில் தமன்னா உடம்பில் ரூபி எனும் நடிகையின் ஆவி குடிகொண்டு தனக்கு வேண்டிய காரியங்களை செய்யும். அந்த படம் நகைச்சுவை மற்றும் திகிலுடன் உருவாக்கப்பட்டு, நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்த படத்தில், தமன்னா உடம்பில் ரூபி பேயும், பிரபுதேவா உடம்பில் அலெக்ஸ் என்கிற பேயும் புகுந்து கொண்டு செய்யும் அட்டகாசங்களை அடுத்த மாதம் வெள்ளித்திரையில் கண்டு களிக்கலாம்.

மேலும், இந்த படத்தில், நடிகை நந்திதாவும் நடித்துள்ளார். ஒருவேளை அவருடைய காதலராக அலெக்ஸ் பேய் இருக்கும் என தெரிகிறது.

இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version