சினிமா செய்திகள்

கமல்ஹாசனை இயக்கும் அளவுக்கு நம்பிக்கை வரவில்லை: ஏ.ஆர் முருகதாஸ்

Published

on

கஜினி, ரமணா, கைதி போன்ற பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இப்போது தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு முடிந்து இன்னும் திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கப்படாத நிலையில், ஏர்.ஆர்.முருகதாஸ் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அதில் அஜித், விஜய், ரஜினி என பல்வேறு முன்னணி கதாநாயகர்களை வைத்து படம் இயக்கிவிட்டீர்கள். கமல்ஹாசனை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அந்த கேள்விக்கு பதில் அளித்த ஏ.ஆர்.முருகதாஸ், கமல்ஹாசனை இயக்கும் அளவுக்கு எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை, ஒருவேலை வரும் காலத்தில் அதற்கு எனக்கு நம்பிக்கை வரும் போது, அதற்கேற்ற திறன் மற்றும் கதை என்னிடம் இருந்தால் கண்டிப்பாக கமல்ஹாசனை வைத்து படம் இயக்குவேன் என்று தெரிவித்துள்ளர்.

seithichurul

Trending

Exit mobile version